2023 உலகக் கிண்ணம்: இறுதிப்போட்டியில் இந்தியா மீண்டும் தோல்வி
புதிய இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய(19) இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.
இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ஓட்டங்களையும், சுப்மன் கில் 7 பந்துகளில் 4 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும், விராட் கோலி 63 பந்துகளில் 54 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 09 பந்துகளில் 22 ஓட்டங்களையும் கேஎல் ராகுல் 107 பந்துகளில் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அணியின் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 107 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி, 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இரண்டாம் இணைப்பு
2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று (19) அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதி வருகின்றன.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.
இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ஓட்டங்களையும், சுப்மன் கில் 7 பந்துகளில் 4 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும், விராட் கோலி 63 பந்துகளில் 54 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 09 பந்துகளில் 22 ஓட்டங்களையும் கேஎல் ராகுல் 107 பந்துகளில் 66 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 28 ஓட்டங்களையும் முகமது ஷமி 10 பந்துகளில் 06 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அணியின் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 107 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(19) இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. இந்த நிலையில், போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இறுதிப் போட்டி
இதன்படி, கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3ஆவது மற்றும் 4ஆவது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் (Richard Marles) நேரில் காண பார்வையிட உள்ளமையினால் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் போது மைதானம், அணிகள், பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக 4,500 பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதுடன், உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது.
மாபெரும் இறுதிபோட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பெட் கமிஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.