உலக கோப்பை இறுதி போட்டி: 20 வருடங்களின் பின் மோதும் இந்தியா - அவுஸ்திரேலியா
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பல பரிட்சை நடத்துகிறன.
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப்போட்டியாக இந்த போட்டி அமையப்பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த போட்டியில் நடப்பு தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் வெற்றி பெற்று தோல்வியை பெறாத அணியாக இந்திய அணி முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டி
மேலும், அவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை தகுதிகான் சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியை தழுவிய நிலையில் எனைய போட்டிகளில் அனைத்திலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி இதுவரை 8 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது.
இந்த தொடர்களில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை ஐந்து முறை அவுஸ்திரேலியா வென்றுள்ளது.
இந்திய அணியை பொருத்தமட்டில் 5 ஐசிசி கோப்பைகளை இதுவரை வென்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு
இந்நிலையில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் 13 போட்டிகளில் மோதி இருக்கிறன.
இதில் இந்திய அணி 5 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா அணி 8 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன.
இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் 150 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் இந்திய அணி 57 போட்டிகளிலும், அவுஸ்திரேலிய அணி 83 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.