இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு மாலைத்தீவு அதிகாரபூர்வ கோரிக்கை
இந்தியா தனது இராணுவத்தை திரும்பப் பெறுமாறு மாலைத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டுள்ளது.
மாலைத்தீவில் இருந்து இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் மாலைத்தீவு அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாக மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவில் எட்டாவது ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸு (Mohamed Muizzu) கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்தன் பின்னர் நாட்டில் இருந்து இந்தியா தனது இராணுவ படைகளை திரும்பப் பெறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
இந்திய தரப்பின் தகவல்
இதையடுத்து, இரு நாடுகளும் "செயல்படக்கூடிய தீர்வை" காண முயற்சிக்கும் என்று இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியா-மாலைத்தீவு ஒத்துழைப்பு குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், மாலைத்தீவு ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் தொடர இந்தியா எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.