முல்லைத்தீவில் மையம் கொண்ட காற்று சுழற்சி : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த பதவி ஏற்ற நாளில் இருந்து ஆரம்பித்த அட்டூழியங்கள்! பறிக்கப்படுமா ராஜபக்சர்களின் குடியுரிமை(Video)
சீரற்ற காலநிலை
வட கிழக்கில் இன்று(18) தொடக்கம் எதிர்வரும் 21வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வருகின்றது.
இம் மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது.
இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக இன்றையதினம்(18) சனிக்கிழமை காலை 7மணியளவில் காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று (18) தொடக்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் எனவும் மழையுடன் சேர்த்து மிதமான காற்றும் வீசக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
