வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த விபத்து : உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியைகள் இன்று(Video)
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
வெல்லம்பிட்டியவில் உள்ள இல்லத்தில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
சிறுமியின் உயிரைக் காவு கொண்ட விபத்து
கடந்த, 15ஆம் திகதி வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து வீழ்ந்ததில், ஆறு வயதுடைய செஹன்சா என்னும் சிறுமி உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
உயிரிழந்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், தனது சித்தி மற்றும் பாட்டியின் பராமரிப்பில் சிறுமி செஹன்சா இருந்துள்ளார்.
இந்தநிலையில், தனது பிறந்தநாள் அன்று பாடசாலைக்குச் சென்றபோது இந்த அனர்த்தத்தில் சிக்கிக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் இருந்து விபத்து நேர்ந்ததற்கு மறுதினம் நாட்டுக்கு திரும்பியிருந்த நிலையில், இன்றையதினம் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை







ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
