பாடசாலை அதிபர் தாக்கப்பட்ட விவகாரம்: கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலை
புதிய இணைப்பு
வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இரு நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் விசாரணைக்காக மாத்திரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கிரேன்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு நபர்களும் கைது செய்யப்பட்டதாக எண்ணிய அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றி ஒன்று திரண்டதுடன், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரி அங்கு திரண்டிருந்த மக்களை சுமூகமாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதுடன், விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட இருவரையும் விடுதலை செய்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி கிரேன்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்விபயிலும் மாணவி ஒருவர் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்திருந்தார்.
பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது
தகவலறிந்து பாடசாலை வளாகத்திற்குள் சென்ற குறித்த பிரதேச மக்கள் சிலரால் அப்பாடசாலையின் அதிபர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேகநபர்களை கிரேன்பாஸ் பொலிஸார் கைது செய்த்துள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு அருகிக் கூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டிற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம்! ஒவ்வொரு குடிமகனுக்கும் நட்ட ஈடு(Video)

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
