சீன நிலக்கரி உற்பத்தி மையத்தில் தீ விபத்து : 20க்கும் மேற்பட்டோர் பலி
சீனாவின் வடக்கு ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் முதன்மையான நிலக்கரி உற்பத்தி மையமான ஷாங்சியில் உள்ள நான்கு மாடிகள் கொண்ட யோங்ஜு நிலக்கரி தொழில்துறை கட்டடத்தில் இன்று (16) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
தீ விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதுவரை மொத்தம் 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் ஷாங்க்சி மாகாணம் என்பது சீனாவின் மிக அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
