அகதி தஞ்சம் கோரி தாயகம் திரும்பியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து 33 ஆண்டுகளின் பின்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய மூவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி கிழக்கு, குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை பருத்தித்துறை நீதிவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியல் நீடிப்பு
போர் காரணமாக குடத்தனை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா நாகேஸ்வரி (வயது-58), அவரது மகளான சின்னராஜா சுதர்சினி (வயது-42) மகனான சின்ன ராஜா சுதாகரன் (வயது-39) ஆகியோர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தனர்.

தற்போது படகு மூலமாக தாயகம் திரும்பி குடத்தனை பகுதியில் உள்ள உறவினர் வீடு
ஒன்றில் தங்கி இருந்தபோது பருத்தித்துறை பொலிஸாரால் கடந்த மாதம் 10 ஆம் திகதி
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பருத்தித் துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே அவர்களின் விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam