மீண்டும் மீண்டும் தாக்குதல்! மத்தியக் கிழக்கு நாடுகளில் வெடிப்புச் சத்தங்கள் - இஸ்ரேல் கொடுத்துள்ள பதில்
புதிய இணைப்பு
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்காப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் இன்று காலை முதல் மத்திய கிழக்கு முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியுள்ளது. பல தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் "ஆறாவது அலை"யைத் தொடங்கியதாகக் கூறியதாக ஈரானின் அரை அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்காப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேல் முழுவதும் சைரன்களின் ஒலி கேட்டவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
துபாய் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளில் ஆங்காங்கே மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று(01.03.2026) காலை 07.30 மணியளவில் இவ்வாறு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருவதாகவும் இதன் காரணமாக, குவைத் உள்ளிட்ட நாடுகளில் வான்பரப்பில் சைரன்களை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் மீண்டும் கேட்கும் வெடிச் சத்தங்கள்
இதன்படி, ஈரான் இன்று காலை மத்திய கிழக்கு முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் அவதானிக்கப்பட்டுளு்ளன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் "ஆறாவது அலை" ஒன்றை நடத்தியதாகக் கூறியதாக ஈரானின் அரை அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேல் முழுவதும் பல சுற்று சைரன்கள் ஒலித்ததாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணியளவில் மூன்று பெரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் தோஹாவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பல பெரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.
பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் இன்று காலை நாட்டில் சைரன்கள் ஒலித்ததாகவும், குடியிருப்பாளர்கள் "அமைதியாக அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு" எச்சரித்ததாகவும் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், ஈராக்கிய நகரில் இன்று காலை பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri