விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் துவாரகாவின் படத்தை உருவாக்கி அதனை மாவீரர் தினத்திற்கு வெளியிட்டு அவர் உயிருடன் இருக்கின்றார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவீரர் தினம்
நவம்பர் 27ம் திகதி வெளியிடுவதற்காக காணொளி ஒன்றை தயாரித்து வருகின்றனர்.
இதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
