பிரமாண்டமாக நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஒரு குறுகிய பார்வை
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நாளை இந்தியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
அஹமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பலம்மிக்க இந்திய அணி மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
நடப்பு சுற்றுத்தொடரில் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியுற்ற போதிலும், அதற்கடுத்து நடைபெற்ற அரையிறுதி உட்பட 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இறுதியாக விளையாடிய போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டு ஏனைய அணிகளை பதற்றமடைய வைத்திருக்கிறது.
தரவரிசைகளில் முதலிடம்
மறுபுறம் சுற்றுத்தொடரின் அனைத்து லீக் போட்டியிலும் அரையிறுதிப் போட்டியிலும் தோல்வி அடையாத இந்திய அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராக உள்ளது.
இந்திய அணியில் விராட் கோஹ்லி, சச்சினின் சாதனைகளை முறியடித்து துடுப்பெடுத்தாட்டத்தில் மின்ன, மறுபுறம் முகமது ஷமி ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி 23 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இவர்கள் இருவரும் முறையே இவ்வுலகக்கிண்ணத்தின் அதிக ஓட்டங்கள் மற்றும் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.
இரு பலம்வாய்ந்த அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்வதால் போட்டி சுவாரஷ்யமாக அமையப்போகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் முறையே இரண்டு மற்றும் ஐந்து தடவைகள் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான போட்டியை காண பெருந்தொகையான ரசிகர்கள் அஹமதாபத்தில் குவித்துள்ளர். நாளைய போட்டியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்ளவுள்ளமை சிற்பம்சமாகும்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |