இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக செல்வோருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைப்பு
இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக செல்லும் 69 பேருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த விமானப் பயணச்சீட்டுக்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று (09) வழங்கி வைத்தது.
இஸ்ரேல், இலங்கை அரசுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை 2,252 இளைஞர்கள் இஸ்ரேலில் விவசாய கைத்தொழில் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
லொட்டரி முறை
மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் 5 வருடங்களும் 5 மாத காலத்துக்கு அங்கு பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இலங்கை அரசு சார்பாக இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பணியாட்களை அனுப்புகின்றது. அவர்கள் இஸ்ரேலிய பீபா நிறுவனத்தின் லொட்டரி முறையில் தேர்வு செய்யப்படுகின்றார்கள்.
விமான பயணச்சீட்டுக்களைப் பெற்ற பயனாளிகள் எதிர்வரும் 12ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் இஸ்ரேல் பயணமாக உள்ளனர்.
பணியகத்தின் கோரிக்கை
மேற்கூறிய நடைமுறையை தவிர எந்தொரு மூன்றாம் தரப்பினர் மூலமும் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.
அதனால் மூன்றாம் தரப்பினரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
