அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்படுத்தல்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என்று வெளியான செய்திகள் பொய்யானவை என அராசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (10.09.2024) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கையானது, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் கடந்த மாதம் 12ஆம் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சரவை பரிசீலித்து அங்கீகரித்துள்ளதுடன், 2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திருத்தத்திற்கு உட்படும் வகையில் 25,000 ரூபாவை மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri