வளைகுடாவில் தீவிரமடையும் போர்! அனைத்து எமிரேட்களுக்குமான முக்கிய தடை
ஐக்கிய அரபு அமீரகம் இந்த ஆண்டிற்கான ஈத் பண்டிகையை தொழுகைகளை பள்ளிவாசல்களுக்குள் மட்டுப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் வெளிநில தொழுகைகள் (open-air congregations) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அடுத்த அதிரடி தாக்குதலுக்கு தயார்! பதில் நடவடிக்கைகள் மிக கடுமையானதாக இருக்கும்! ஈரானின் இறுதி எச்சரிக்கை
பெரிய திரளான மக்கள்
General Authority of Islamic Affairs, Endowments and Zakat வெளியிட்ட அறிவிப்பில், ஈத் தொழுகைகள் வெளிநில மைதானங்களிலும் அல்லது குறிப்பிட்ட தொழுகை இடங்களிலும் நடத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அனைத்து எமிரேட்களுக்கும் பொருந்தும். ரமழான் நோன்பு மாதத்தின் முடிவை குறிக்கும் Eid Al Fitr, பொதுவாக பெரிய திரளான மக்கள் கூடுகைகளுடன், திறந்த வெளிகளில் நடத்தப்படும்.
ஆனால் இம்முறை, மக்கள் பள்ளிவாசல்களுக்குச் சென்று அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறுவதாவது, பொதுமக்களின் பாதுகாப்பையும், கூட்டநிர்வாகத்தையும் உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் பதற்றம்
மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஈரான் தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் பசிஜ் படை தளபதி குலாம்ரெசா சுலைமானி உயிரிழந்ததைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் ஆற்றல் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
UAE அதிகாரிகள் தெரிவித்ததாவது, வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சில தாக்குதல்கள் தடுக்கப்பட்டாலும், விழுந்த சிதைவுகள் சில இடங்களில் சிறிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஈத் பண்டிகை
குடியிருப்பவர்கள் வீடுகளுக்குள் இருக்கவும், பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல், QatarEnergy நிறுவனத்தின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள முக்கிய எரிவாயு நிலையத்தை குறிவைத்தது.

இது உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதி நிலையமாகக் கருதப்படுகிறது. இந்த தாக்குதலால் “பெரும் சேதம்” ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியாத் நகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த தாக்குதல்களை கண்டித்தனர்.
ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், தெரிவித்ததாவது, சவுதி அரேபியா தேவையானால் இராணுவ நடவடிக்கை எடுக்க உரிமையை வைத்திருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, துருக்கி, பஹ்ரைன், கட்டார், குவைத் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகளில், ஈத் பண்டிகையை வெள்ளிக்கிழமை (மார்ச் 20) கடைப்பிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு