பொலிஸ் காவலில் உதயநிதி ஸ்டாலின்..பரபரப்புக்கு மத்தியில் அவசரமாக புறப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர்
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் தந்தையான மு.க ஸ்டாலின் அவசரமாக புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரபரப்பான சூழ்நிலை
உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தததாக முறைப்பாடளிக்கப்பட்டது.

இதற்கு அமைய அவர் இன்று தமிழ்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்டாலினின் கைதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இதற்கு மத்தியில், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தனது மகனின் கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் இதுவரை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை என இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.
உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி..! தமிழகம் முழுவதும் பரவிய பெரும் பரபரப்பு - களமிறக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர்