அடுத்த அதிரடி தாக்குதலுக்கு தயார்! பதில் நடவடிக்கைகள் மிக கடுமையானதாக இருக்கும்! ஈரானின் இறுதி எச்சரிக்கை
ஈரான், தனது சொந்த எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் மேலும் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டணி நாடுகளின் வளைகுடா பகுதியிலுள்ள ஆற்றல் கட்டமைப்புகளை “முழுமையாக அழிக்கும் வரை” தாக்குவோம் என எச்சரித்துள்ளது.
இஸ்ரேல், தெற்கு பார்ஸ் எரிவாயுவடன் தொடர்புடைய ஈரானின் ஆற்றல் வசதிகளை தாக்கியதன் பின்னர், தெஹ்ரான் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
எதிரிக்கு எச்சரிக்கை
ஈரானின் இராணுவ மத்திய கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர்,ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை(IRGC) தொடர்புடைய Fars News Agencyக்கு வழங்கிய தகவலின்படி, “இஸ்லாமியக் குடியரசான ஈரானின் ஆற்றல் கட்டமைப்புகளை தாக்கியதன் மூலம் நீங்கள் பெரிய தவறு செய்துள்ளீர்கள் என்பதை எதிரிக்கு எச்சரிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இது மீண்டும் தொடர்ந்தால், உங்களின் மற்றும் உங்கள் கூட்டணி நாடுகளின் ஆற்றல் கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், முழுமையான அழிவை ஏற்படுத்தும் வரை நிற்காது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இதுவரை நடைபெற்ற தாக்குதல்களை விட ஈரானின் பதில் நடவடிக்கைகள் “மிகவும் கடுமையானதாக இருக்கும்” எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri