போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் - மேபீல்ட் சந்தியில் முச்சக்கர வண்டி சுற்றிவளைப்பு

Sri Lanka Police Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Sri Lanka Government Hatton
By Malaivanjan Sep 28, 2026 10:11 PM GMT
Report

தோட்டத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த முச்சக்கர வண்டியை தோட்ட இளைஞர்கள் சுற்றிவளைத்ததால் மேபீல்ட் சந்தி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று(28.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேபீல்ட் தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை மலையில் முச்சக்கர வண்டியொன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியுடன் மடக்கி பிடித்த இளைஞர்கள்

இதனை அவதானித்த தோட்ட இளைஞர்கள், முச்சக்கர வண்டியை சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் - மேபீல்ட் சந்தியில் முச்சக்கர வண்டி சுற்றிவளைப்பு | Three Wheeler Crackdown At Mayfield Junction

இந்த நிலையில் முச்சக்கர வண்டியில் வந்திருந்த இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் மற்றொருவரை இளைஞர்கள் தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தைத் தொடர்ந்து, மேபீல்ட் சந்தியில் பெருமளவான இளைஞர்கள் ஒன்றுகூடியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக குறித்த தேயிலை மலைப்பகுதியில் போதைப்பொருட்களுடன் சில இளைஞர்கள் பிடிபட்டதாகவும், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்

இந்நிலையில், இன்று சந்தேகத்திற்கிடமான முறையில் தேயிலை மலைப்பகுதியில் நீண்ட நேரமாக தொலைபேசியை பயன்படுத்தியபடி சுற்றித்திரிந்த நபர்களை அவதானித்ததாகவும் அவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முயன்றதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் - மேபீல்ட் சந்தியில் முச்சக்கர வண்டி சுற்றிவளைப்பு | Three Wheeler Crackdown At Mayfield Junction

எனினும் அவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியையும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் வரும்வரை விடமாட்டோம் என இளைஞர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த திம்புல்லை - பத்தனை பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதியையும் முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை மேபீல்ட் காமஸ்டன் மற்றும் ஸ்டோனிகிளிப் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதியில் அண்மைக்காலமாக கஞ்சா மற்றும் அபின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சந்தேகம் நிலவுவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கை

தேயிலை மலைப்பகுதிகளுக்கு சிலர் தினமும் வருகை தந்து தொலைபேசி மூலம் இடங்களை அடையாளப்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இளைஞர்கள் கூறுகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் - மேபீல்ட் சந்தியில் முச்சக்கர வண்டி சுற்றிவளைப்பு | Three Wheeler Crackdown At Mayfield Junction

இந்த நிலைமைக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தோட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தியாக தீபன் விவகாரத்தில் மறைக்கப்பட்ட மதுசிகான் - உடைக்கப்படும் இரகசியங்கள்

தியாக தீபன் விவகாரத்தில் மறைக்கப்பட்ட மதுசிகான் - உடைக்கப்படும் இரகசியங்கள்

திலீபனின் தியாகத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிலர்! இளங்குமரன் குற்றச்சாட்டு

திலீபனின் தியாகத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிலர்! இளங்குமரன் குற்றச்சாட்டு



மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US