யாழில் திலீபன் வெண்கல சிலை அகற்றம்: அரசியல் பிழைப்புக்கான நாடகம் - இளங்குமரன் குற்றச்சாட்டு
தமிழர் பகுதிகளில் உள்ள தலைவர்கள் சிலர் தியாகி திலீபனின் தியாகத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று(28.09.2026) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிழைப்புக்கான நாடகம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் - நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் உருவச் சிலை அகற்றபட்ட விடயம் என்பது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த திலீபனின் தியாகத்தை அவமதிப்பது போன்றதொரு விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வடக்கில் மாத்திரம் அரசியல் இலாபம் தேடி அதனை அரசியலாக்கியுள்ளனர்.
அந்த இடத்திலே தொடர்ச்சியாக அரசியல் இலாபங்களைத் தேட முயற்சிக்கின்றார்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார்.