ஐ.நாவை இனியும் ஏமாற்ற முடியாது! - இலங்கை அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஐ.நாவையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று இலங்கை அரசு இனியும் எண்ணக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை அரசை சர்வதேசக் கண்காணிப்புப் பொறிக்குள் சிக்கவைத்துக் கடும் அழுத்தங்களைக் கொடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரின் வாய்மூல அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரின் கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்..
- இலங்கை மீதான பெச்லட் அம்மையாரின் காட்டமான அறிக்கை! இன்று பதிலளிக்கிறது இலங்கை அரசு
- ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு வெளியானது
- கோட்டாபயவால் விடுதலை செய்யப்பவட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி
- ஜெனிவாவில் தமிழர் தரப்புக்கு காத்திருந்த ஏமாற்றம்! காரணம் யார்?
- ஜெனிவாவிற்கு அரச தரப்பாக சுமந்திரன் வரலாம்! பகிரங்க அழைப்பு
- இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்தை ஏற்கிறோம்! பிரித்தானியா
- கருணாவுடன் இணைந்து தோல்வியுற்றவரே சாணக்கியன்! கடும் குற்றச்சாட்டு