ஜெனிவாவிற்கு அரச தரப்பாக சுமந்திரன் வரலாம்! பகிரங்க அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனை அரசாங்கம் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறது என உலக தமிழர் இயக்கத்தின் பண்நாட்டு இணைப்பாளர் பொஸ்கோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு ஐ.நா மனித உரிமைகள் சபையோடு இணங்கி செயற்படும் என ஜனாதிபதி கொடுத்த உத்தரவாதத்தைச் சொல்லி ஆணையாளர், அவர் அதனைச் செயலில் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியதை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம்.
இது குறித்து ஊடறுப்பு நிகழ்ச்சியில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பாதிக்கப்பட்ட தரப்பை முன்வைக்க விரும்புகிறேன். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அரசாங்கம் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறது.
அனைத்துலக நாடுகள் மத்தியில் இலங்கையின் பொறிமுறைகள் செயற்முறைக்கு உட்படுத்தபடுகிறது. அதற்கு ஒரு ஊடக பேச்சாளராகத் தான் அவர் செயற்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு கூட்டத்தொடருமே முக்கியமானது. அதேபோல் ஒவ்வொரு மாதமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட வண்ணம் இருத்தல் வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் போதுதான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பொறிமுறையினுள் தமிழர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கிறது என எடுத்து ஒலிக்கப்படும்.
எனவே பாதிக்கப்பட்ட தரப்புகள் தொடர்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதனால் தான் அவர்களுடைய பிரச்சனைகள் ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து பேசப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
ஜெனிவாவில் தமிழர் தரப்புக்கு காத்திருந்த ஏமாற்றம்! காரணம் யார்?
ஐ.நா. ஆணையரின் அறிக்கையை வரவேற்கின்றது கூட்டமைப்பு! சுமந்திரன்
கோட்டாபயவால் விடுதலை செய்யப்பவட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 20 நிமிடங்கள் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam