இலங்கையில் எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல், டீசல் மற்றும் மண் எண்ணெய் விலைகள் இவ்வாறு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
நள்ளிரவுடன் நடைமுறையாகும்
இதன்படி, ஒக்டன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 317 ரூபாவாக உயர்ந்துள்ளது (முந்தைய விலை 293 ரூபாவாகும்) இதன்படி ஒரு லுீற்றருக்கு 24 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
Octane 95 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 365 ஆக உயர்ந்துள்ளது (முந்தையது 340 ரூபாவாகும்) இதன்படி ஒரு லுீற்றருக்கு 25 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் 303ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இதன்படி ஒரு லுீற்றருக்கு 22 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 353 ரூபாவாக உயர்ந்துள்ளது, இதன்படி ஒரு லுீற்றருக்கு 24 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதேவேளை,, மண் எண்ணெய் ஒரு லீற்றர் 195 ரூபாவாக உயர்ந்துள்ளது இதன்படி ஒரு லுீற்றருக்கு 13 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்றைய தினம் நள்ளிரவுடன் நடைமுறையாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.