மன்னாரில் பேருந்தை மோதித் தள்ளிய டிப்பர்: ஒருவர் காயம்
மன்னார் - முள்ளிக்குளம் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (17.10.2023) காலை முள்ளிக்குளம் - ஸீனத் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முள்ளிக்குளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றை எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ் விபத்தில் காயமடைந்தவர் சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
