நாளை கொழும்பில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டம்: இராமலிங்கம் சந்திரசேகரன் !
எரிபொருள் விலையேற்றம், கேஸ் விலையேற்றம், மற்றும் பொருட்களுக்கான கட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, போன்றவற்றிற்கு கோட்டபய அரசாங்கத்தினால் எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர், இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாண மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாட்டில் எரிபொருள் பிரச்சனை தலை தூக்கியுள்ளதன் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். ஆனால் இந்த அரசாங்கமும் ஒரு ஊமை அரசாங்கமாக மௌனம் காத்து வருகிறது.
அதாவது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், இந்த அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் பிரச்சினை தொடர்பிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மௌனமாக வாயை மூடி பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
முதல் கூறினார்கள், கொரோனா பிரச்சனை காணப்படுவதாக. ஆனால் தற்பொழுது கொரோனா நோய் ஒரு பிரச்சினை அல்ல தற்பொழுது டொலர் இல்லாத பிரச்சனை ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் நடத்த தொடங்கியுள்ளது. அத்தோடு இந்த மக்கள் மத்தியில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முனைகின்றது.
எனவே, இதனை கண்டித்து கொழும்பில் மகளிர் தினமாகிய நாளைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார் .
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri