பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு - இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக திரண்ட மக்கள்
இலங்கையில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் அருகே அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக நேற்று(15.09.2026) இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

கண்காணிப்பு அரசுக்கு வழிவகுக்கும், இந்தியாவுக்கு தரவுகளைத் தாரைவார்க்கும் பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டையை எதிர்ப்போம், இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தங்கள் 7ஐயும் வெளிப்படுத்துக உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பியுள்ளனர்.