தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் - வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில் நேற்று(15.09.2026) நடைபெற்றுள்ளது.
இதன்போது தியாகி திலீபனின் நினைவு படத்திற்கு மலர் மாலை அணிவித்து, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன், மாநகர சபை உறுப்பினர் தர்மா மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



