பதவி விலகினார் கூட்டமைப்பின் பருத்தித்துறை நகர சபைத் தலைவர்!

Jaffna Tamil National Alliance
By Rakesh Dec 19, 2022 09:00 AM GMT
Report

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ. இருதயராஜா தனது பதவியை இன்று காலை பதவி விலகியுள்ளார்.

பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான திருத்திய வரவு - செலவுத் திட்டம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெற இருந்தன.

அதற்காகச் சபை காலை 9:30 மணிக்குக் கூடவிருந்தது. இந்நிலையில், காலை 9:20 மணிக்கு வருகை தந்த நகர சபைத் தலைவர் யோ. இருதயராஜா, சபையின் செயலாளரிடம் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துவிட்டு வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து 9:35 மணியளவில் சபையைக் கூட்டிய பருத்தித்துறை நகர சபை செயலாளர், தலைவர் பதவி விலகியதைச் சபைக்கு அறிவித்ததுடன் அவர் பதவி விலகியது தொடர்பாக வர்த்தமானியில் பிரசுரித்து புதிய தவிசாளர் தெரிவாகும் வரை சபை நடவடிக்கை இடம்பெறாது எனவும் தெரிவித்தார்.

பதவி விலகினார் கூட்டமைப்பின் பருத்தித்துறை நகர சபைத் தலைவர்! | The Chairman Of The Federation Of Dudtidurat

திருத்திய வரவு - செலவுத் திட்டத்தை ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் ஒன்று சேர்ந்து மீண்டும் தோற்கடிக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தான் இன்று சபை அமர்வுக்கு முன்பதாகவே தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று இருதயராஜா அறிவித்துள்ளார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கடந்த 5ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 6 பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் என 8 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துத் தோற்கடித்திருந்தனர்.

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேர், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர், சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் என 7 பேர் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதையடுத்து இன்று திருத்தங்களுடன் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு - செலவுத் திட்டத்தையும் சபை உறுப்பினர்கள் பலர் தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்று வெளியான தகவலையடுத்து நகர சபைத் தலைவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இரண்டாம் தடவையும் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் தலைவர் பதவி வறிதாகும். அந்நிலையில், தோற்கடிக்கப்பட்டு தலைவர் பதவியை இழக்காது இருப்பதற்காகத் தலைவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோ.இருதயராசா சற்றுமுன்னர் தனது பதவியி்ல் இருந்து விலகியதை அடுதுது பருத்தித்துறை நகர் வர்த்தகர்கள் வெடொகொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US