ஞானசார தேருரக்கான தண்டனை குறித்து சர்ச்சையை கிளப்பும் முன்ளாள் பிரதம நீதியரசர்
தேசப்பற்றுடைய சிங்களத் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
பௌத்த தேரர்களுக்கு நெருக்குதல் கொடுக்கும் செயல் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சாசனத்தை பாதுகாத்து போஷிக்கும் பொறுப்பு மற்றும் பௌத்த உரிமைகளை பாதுகாக்கும் தேசிய மாநாடு இன்றைய தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற போது சரத் என் சில்வா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை முற்று முழுதாகவே சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
”நீதவான் ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவரான பிரிதி பத்மன் சூரசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தானது நீதிமன்றிலும் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் குறைவு என்ற காரணத்தினால் கடுமையான தண்டனை வழங்குமாறு உங்களுடைய நீதிமன்றிற்கு முன்னிலைப்படுத்துகின்றேன்” என நீதவான் கடிதம் எழுதியுள்ளதாக சரத் என் சில்வா குறிப்பிடுகின்றார்.
இதில் ஓர் பிரச்சினை உள்ளதாகவும் இதில் சட்ட ரீதியான தன்மை என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பிற்காக 18 மாதங்கள் சிறைத்தண்டனையே விதிக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் நீதியரசர் பிரிதி பத்தமன் சூரசேன, ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளதாகவும் சட்டத்தின் பிரகாரம் 18 மாத கால தண்டனையே விதிக்கப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this..