மகிந்த - ஷிரந்தியின் இரகசிய திட்டமிடலின் பின்னணி! யாருக்கும் தெரியாத பல இரகசியங்கள்..
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஷிரந்தி ராஜபக்ச இதய சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நாளைய தினத்துடன் (13) அவரது விளக்கமறியல் முடிவடைவதுடன், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சூழ்நிலையும் காணப்படுகிறது.
இதனால், அவரது மருத்துவமனை அனுமதி ஒரு அரசியல் நாடகமாக இருக்குமோ என்ற கருத்துகளும் வெளியாகியுள்ளன.
ராஜபக்ச குடும்பத்தினர் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின்போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகளும், அதன் பின்னரான அரசியல் நடவடிக்கைகளும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களின் தாக்கமே தற்போதைய சூழலிலும் எதிரொலிப்பதாகப் பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போரினால் உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பிரிவுகளைச் சந்தித்த தமிழ் மக்கள் பெரும் துயரத்தில் இருந்தபோது, ஆட்சியாளர்கள் போர் வெற்றியைக் கொண்டாடியமை பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்த செயலாக விமர்சிக்கப்படுகிறது.
மேலும், 2010ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டம், போருக்குப் பின்னரான வடக்கு மக்களின் நிலைமை மற்றும் அப்பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தமை ஆகியன அக்காலத்தில் தமிழ் மக்களிடையே பெரும் கவலையையும் பாதிப்பையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு, அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற பலரும் அறியாத விடயங்களையும், அவற்றின் பின்னணிகளையும் உங்களுக்குக் கொண்டுவருகிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி...
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan