ஆட்டம் காணும் சவூதியின் வான் பாதுகாப்பு..! அதிர வைக்கும் பின்னணி
சவுதி அரேபியா மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்களின் நடுவில் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பைக் காப்பது மிகவும் சவாலானது என்று கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
ஒக்டோபர் 2026 தொடக்கத்தில் இருந்து, ஹூதி படைகள் சவுதியின் தலைநகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் பிற முக்கிய விமான நிலையங்களை குறிவைத்து பலமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களின் விமானப் பயணங்களை கடுமையாக பாதித்துள்ளன.
சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு சாதனங்கள் (முக்கியமாக அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டவை) இந்தத் தாக்குதல்களை ஏன் முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்பது குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இந்த மோதல் செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கியமான கடல் வணிகப் பாதைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண அழுத்தம் கொடுக்கப்படுகிறார்.
இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய விளைவுகள் காரணமாக நேரடித் தலையீடு சிக்கலாக உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி..