அடுத்தடுத்து வெளியாகும் பிரதமரின் அதிரடி அறிவிப்புக்கள்! நிகழவுள்ள பாரிய மாற்றம்
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் பயிற்சி
அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பரீட்சை நடைமுறை, வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை, பாடத்திட்டங்களில் மாற்றம் என புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பல அறிவிப்புக்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
இந்த புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த மாற்றங்களை பலர் ஆதரிக்கும் அதேவேளை எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



