கொலை வழக்கில் புரட்சித்தீர்ப்பை வழங்கிய இந்திய உயர்நீதிமன்றம்
கொலை குற்றம் ஒன்றுக்காக இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தமக்காக வீட்டார் ஒழுங்குப்படுத்திய மணமகனை விரும்பாத கல்லூரி மாணவி ஒருவர், 22 வருடங்களுக்கு முன்னர், தமது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்திய நீதித்துறை
இந்த குற்றத்துக்காக குறித்த மாணவியும் அவருடைய கல்லூரி நண்பர்களும் ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர் எனினும் மேன்முறையீட்டை அடுத்து அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இந்திய உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அத்துடன், கொலை வழக்கில் தொடர்புடைய அந்த பெண் உள்ளிட்ட நான்கு பேரும் ஆளுநரிடம் மன்னிப்பு கோரவும் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சமூக கோட்பாடுகளின் தோல்வி, பாகுபாடு, அலட்சியம் ஆகியவையே இளம் வயதான கல்லூரி மாணவியான சுபாவை 22 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ய தூண்டியிருக்கிறது என்ற அடிப்படையிலேயே உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த சூழலில், குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவராகிறார்.
அவரை கருணை மனப்பான்மையுடன் திருத்துவது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்நீதிமன்றம்,சமூக கட்டமைப்புக்குள் அவரை மீண்டும் இணைக்க வேண்டும். அதற்கான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்றும் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.



