ஈரான் விவகாரத்தில் இலங்கையை பாராட்டியுள்ள ஐ.நா
ஈரானிய கப்பலையும் அதன் பணியாளர்களையும் மீட்பதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.
இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரஞ்சு தனது "X" கணக்கில் பதிவொன்றினையிட்டு பாராட்டியுள்ளார்.
We welcome the Sri Lankan Government’s focus on humanitarian assistance grounded in @UN and intl. conventions, respecting its commitment to multilateralism, maintaining neutrality, and underscoring its dedication to peace @MFA_SriLanka pic.twitter.com/DdIXKdigwu
— Marc-André Franche (@MAFrancheUN) March 6, 2026
இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான தலையீடு
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மரபுகளின் அடிப்படையில் பன்முகத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை மதித்து, பாரபட்சமற்ற தன்மை மற்றும் அமைதிக்கான இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான தலையீட்டை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
மேலும், கப்பலையும் அதன் பணியாளர்களையும் மீட்பதில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அதன் சர்வதேச உறுதிப்பாடுகளை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கின்றன என்றும் பாராட்டியுள்ளார்.
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri