ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை
ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25 முதல் 30 வரை குறைக்க, கல்வி அமைச்சகம், இலக்கு வைத்துள்ளதாக, பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
50 அல்லது 60 மாணவர்களைக் கொண்ட நெரிசலான வகுப்பறைகளில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமில்லை என்றும் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
காலியில் உள்ள தட்சிணபாய கேட்போர் கூடத்தில், தென் மாகாணத்தில் உள்ள கல்வி அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சீர்திருத்த செயன்முறை
புதிய சீர்திருத்தங்கள் பாடத்திட்ட புதுப்பிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. அவை, ஆசிரியர் தொழில்முறையை மேம்படுத்துதல், கல்வி நிர்வாகத்தை மறுசீரமைத்தல் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்வதற்காக உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தனிப்பட்ட இலாபத்திற்காகச் செய்யும் ஒன்றல்ல, இது ஒரு தேசிய பொறுப்பு. இந்த சீர்திருத்தங்கள், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், சீர்திருத்த செயன்முறை சவாலானது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



