ஆசிரியர் - அதிபர் போராட்டம்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பத்தரமுல்லை - பெலவத்தையில் நடைபெற்ற ஆசிரியர் - அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆசிரியர் - அதிபர் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியிருந்த நிலையில் அதில் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர்
போராட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது கவலையை குறித்த அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், முரண்பாடுகளை தீர்க்க ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள் செயற்படும் வேளையில் மாநாடு ஒன்றுக்காக கல்வி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இடம்பெற்ற இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
