பிரித்தானியாவில் நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதாரவாக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ சரவணராஜாவிற்கு நீதி வேண்டி தாயகத்திலும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம் பெயர்நாடுகளிலும் வாழும் செயற்பாட்டாளர்களினால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் Freedom Hunters அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று நேற்றையதினம் (25.10.2023) பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன் நடைபெற்றது.
சர்வதேசம் தலையிட வேண்டும்
இப் போராட்டத்தில் பெரியோர், இளையோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டோர், 'நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும்', 'குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்', 'சர்வதேசம் தலையிட வேண்டும்' போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
