சவுதி, ஓமான் விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்கள்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை காரணமாக, சவுதி அரேபிய விமான நிலையத்தில் குறைந்தது 109 இலங்கையர்கள் சிக்கியுள்ளதுடன், ஓமான் விமான நிலையத்தில் மேலும் 22 பேர் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர்களில் சிலர் ஏற்கனவே இலங்கைக்கு திரும்பியிருக்கக்கூடும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
குறிப்பாக, ஓமான் விமான நிலையத்தில் சிக்கியிருந்த சிலர், இன்று அதிகாலை இலங்கைக்கு வந்த ஓமான் ஏயார் (Oman Air) விமானம் மூலம் நேற்றே திரும்பியிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நாடுகள் விதித்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள உறவினர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக நான்கு பேர் இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மேலாக, போர் நிலவரம் குறித்தும் சிலர் விசாரித்துள்ளனர். ஆனால், குடும்பத்தினர் குறித்து நேரடி விசாரணை வந்தது ஒரே ஒரு முறை மட்டுமே,” என அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதலால் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களில் (remittances) எந்தக் குறைப்பும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்கள் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா கடல் வழித்தடங்கள் வழியாக வருவதால், எரிபொருள் வழங்குதலிலும் பாதிப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார். “ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இலங்கைக்கு வருகிறார்கள்,” எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நிலைமை மேலும் மோசமடையாது என்ற நம்பிக்கையுடன் அரசு நம்பிக்கையூட்டும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam