கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்
சிறீதரன் தலைமையில் வேட்புமனு தாக்கல்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன் தினம் (18.01.2023) வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது.
கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சி சார்பில் சுயேட்சையாக களமிறங்கிய குழு
கிளிநொச்சி மாவட்டத்திற்கு உபட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேசசபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றிணைந்து போட்டியிட தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் உள்ளிட்ட ஏராளமான கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைமை இம்முறை ஆசனப்பங்கீடு விடயத்தில் கட்சிக்காக கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை புறம்தள்ளி, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்காமல் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொண்டமையால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் தனிவழியே தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்து மிகப்பெரும் மக்கள் ஆதரவோடு சுயேட்சை குழு 1 இன் மூலம் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முரண்பாடு
கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் கரைச்சி மற்றும் பச்சிளைப்பள்ளிக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் எனக்கூறி சுயேட்சைக் குழுவாக வேட்பு மனு தாக்கலொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இருக்கின்ற முரண்பாடு காரணமாக கிளிநொச்சியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் குறித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதவாளர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமை காரணமாக அவரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பாளர்கள் மற்றும் தேர்தலில் கட்சியில் அங்கத்துவம் கொடுக்காதவர்களை இணைத்து சுயேட்சை குழுவின் வேட்புமனுத்தாக்கல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழரசு கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் கிளிநொச்சியில் மூன்று சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில் எதிர்வரும் நாட்களில், இத்தேர்தல் முறையில் ஒரு சிக்கல் இருப்பதால் இவ்வாறான தேர்தல் உத்தி என்பது தொழிநுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் எடுக்கப்பட்டவையே அன்றி எமக்குள் எந்தவொரு விரிசலோ பிரிவினையோ இல்லை என ஊடக அறிக்கை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் பிளவுப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இப்படியான தொடர் பிளவுகள் தமிழரசுக் கட்சயின் வட்டார தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு இன்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை வேட்பாளரான, பூநகரி பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் உட்பட, வட்டார ரீதியாக 11 பேர் மற்றும் பொது வேட்பாளர்களாக 10 பேர் உள்ளடங்கலான 21 வேட்பாளர்களை நியமித்து, அதற்குரிய வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான கெளரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று காலை (2023.01.20) கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்துள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கடந்த புதன்கிழமை(18) கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
