ரஷ்யா, யுக்ரைன் மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், முதல் முறையாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தொடங்கியுள்ளது.
ஒருபுறம் அமைதிக்கான முயற்சிகள் நடந்தாலும், மறுபுறம் நேட்டோ படைகள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
ட்ரம்ப் நிர்வாகம்
ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சின் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்று நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்தாலும், 'நிலப்பரப்பு' விவகாரத்தில் பெரும் இழுபறி நீடிக்கிறது.
உக்ரைனின் கிழக்குப்பகுதியான டான்பாஸை (Donbas) ரஷ்யா கோருகிறது. ஆனால், "வீரர்களின் இரத்தத்தால் வரையப்பட்ட அந்த எல்லையை விட்டுக் கொடுக்க முடியாது" என்பதில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதியாக உள்ளார்.
ரஷ்யா தாக்குதல்
அமைதி உடன்படிக்கையின் 90% பணிகள் முடிந்துவிட்டதாக ஸெலன்ஸ்கி கூறினாலும், மீதமுள்ள 10% மிகக் கடினமானதாக இருக்கும் எனத் தெரிகிறது.

உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதால், கடும் குளிரில் மக்கள் தவித்து வருகின்றனர்.
தேவையற்றவர்கள் தலைநகர் கீவ்வை விட்டு வெளியேறுமாறு மேயர் விட்டாலி கிளிட்ச்கோ எச்சரித்துள்ளார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri