வேட்பு மனுவை தாக்கல் செய்தது தமிழரசுக் கட்சி (photo)
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
நேற்று (18.01.2023) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது.
கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையில் நேற்று (18.01.2023) கையளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2003ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்று(18.01.2023) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று (18.01.2023) முதல் 21ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது.
நேற்று (18.01.2023) முதலாவது வேற்பு மனு தாக்கல் இராஜங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) டி.எம்.வி.பி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: முபாரக்







புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
