எங்கள் மருமகன் தமிழக முதல்வராவாரா! விஜய்யின் கட்சி தொடர்பில் மனோவின் பதிவு

Vijay Mano Ganeshan Sri Lanka India
By Rakesh Feb 04, 2024 03:14 AM GMT
Report

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா, சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் ஆகியோர் வென்ற போது, சொல்லிக்கொண்டது போல், விஜய் கட்சி வெற்றி பெற்று அவர் அங்கே முதலமைச்சரானால், "எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்" என்று இலங்கையில் நாம் சொல்லிக்கொள்ளலாம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு: தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டது தேசிய கீதம்

76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு: தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டது தேசிய கீதம்


தமிழக வெற்றி கழகம்

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"தமிழ்நாட்டில் இன்று அதிரடி பேச்சு பொருள், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்'. தமிழ்நாடு இலங்கைக்கு சமீபமான தமிழர் பெரும்பான்மையாக வாழும் அரசியல் அலகு. ஆகவே, அங்கே நடப்பதை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

விஜயகாந்த் வரை புதுக்கட்சி ஆரம்பித்த அனைவரும் 'திராவிடம்' என்ற சொல்லை, கட்சி பெயரில் சேர்த்துக்கொண்டார்கள். சீமான்தான் முதலில் 'திராவிடம்' என்பதை சித்தாந்த ரீதியாக கைவிட்டு, அதற்கு பிரபல மாற்றாக தமிழ்த் தேசியம் என்பதைக் கையில் எடுத்தார்.

எங்கள் மருமகன் தமிழக முதல்வராவாரா! விஜய்யின் கட்சி தொடர்பில் மனோவின் பதிவு | Tamilaga Vettri Kazhagam Actor Vijay  

விஜய்யின் அரசியல் கட்சியும் 'திராவிடம்' என்பதை கைவிட்டு விட்டது. ஆனால், 'கழகம்' என்பதை விடவில்லை. சித்தாந்த ரீதியாகவா இதுவென சொல்ல இது காலமில்லை. கட்சி பெயரை ஆங்கிலத்தில் எழுதினால், TVK. அதை, தளபதி விஜய் கழகம் என்றும் யோசித்தார்கள் போலும்.

சினிமாவில் வீழ்ச்சி

சமகாலத்தில் கமல் சினிமாவில் வீழ்ச்சியை உணர்ந்து கட்சி ஆரம்பித்தார். அதன்பிறகு அவரது ஒரு படம் சிறப்பாக ஓடி சினிமாவில் அவருக்கு மறுவாழ்வு கொடுத்திருப்பது வேறு விடயம். இப்போது அவரது கட்சி ஏறக்குறைய கரைந்த கட்சி. இனி கலைந்த கட்சிதான். எம்.ஜி.ஆர். சந்தையில் உச்சத்தில் இருக்கும்போது, தனிக்கட்சி ஆரம்பித்தார். அதுபோல், சந்தையில் உயரத்தில் இருக்கும் போதுதான், விஜய்யும் கட்சி ஆரம்பித்துள்ளார்.

இந்த கட்சி, வெற்றி பெறுகின்றதோ, இல்லையோ, தமிழ் சினிமாவில் விஜய்யின் வெற்றிடம், அவரையடுத்த நடிகர்களுக்கு, இன்று பார்ட்டி போட்டு தூள் கிளப்பும் பேரானந்தத்தைத் தந்திருக்கும்.

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

 

அரசியல் ரீதியாக, சீமான் தாக்குப் பிடிப்பார். அ.தி.மு.க., அண்ணாமலை பி.ஜே.பி. ஆகியவற்றுக்கு உடன் ஆபத்து! தன் தந்தை சந்திரசேகரை, விஜய் திட்டமிட்டு ஒதுக்கி வைத்துள்ளார் என எண்ணுகின்றேன். அவரை இதில் உள்வாங்கினால் கட்சி, கோமாளிகள் கும்மாளம் ஆகிவிடும் என்ற பயம் விஜய்க்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்

இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு முதலாவது, இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலம். தமிழ்நாட்டு மாநில அரசுகள் எப்படியோ, மாநிலம் வளர்ந்து விட்டது.

அதன் காரணம் அங்கு நிலவும் சமநீதி சமுதாய கொள்கை, கல்வி வளர்ச்சி, கடும் முயற்சியாளர்கள், உழைப்பாளர்கள் சார்ந்த தனியார் துறை பொருளாதாரம்.

அதனால்தான் தமிழகம் இன்று இந்தியாவில் மிகவும் அதிக நகரமயமாக்களை கண்ட மாநிலம் ஆகியுள்ளது.

எங்கள் மருமகன் தமிழக முதல்வராவாரா! விஜய்யின் கட்சி தொடர்பில் மனோவின் பதிவு | Tamilaga Vettri Kazhagam Actor Vijay  

ஆகவே, சமநீதி கொள்கையை, 'தமிழக வெற்றி கழகம்' கைவிடகூடாது என்பது என் எதிர்பார்ப்பு. மற்றபடி, எல்லாம் ஊகங்கள்தான். பொறுத்துப் பார்க்கலாம்.

கடைசியாக சிரித்து மகிழ ஒன்று. அமெரிக்க உப ஜனாதிபதி கமலா, சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் ஆகியோர் வென்ற போது, சொல்லிக்கொண்டது போல், விஜய் கட்சி வெற்றி பெற்று அவர் அங்கே முதலமைச்சரானால், "எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்" என்று இலங்கையில் நாம் சொல்லிக்கொள்ளலாம்."என்றுள்ளது. 

பரீட்சைகள் பிற்போடப்படும் அபாயம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பரீட்சைகள் பிற்போடப்படும் அபாயம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வவுனியா

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புளியம்பொக்கணை

06 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom, பெல்ஜியம், Belgium

20 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

19 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருவையாறு, Stadskanaal, Netherlands

29 Sep, 2024
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

05 Oct, 1999
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Scarborough, Canada

02 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

29 Sep, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி

01 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US