இலங்கை நாடாளுமன்றத்தில் 2026ம் ஆண்டு நவராத்திரி விழா...!
இலங்கைப் நாடாளுமன்றத்தில் 2026ம் ஆண்டு நவராத்திரி விழா சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மத நல்லிணக்கத்தையும், இந்து சமயப் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் "சிவாகம கலாநிதி சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள், சனாதன தர்மபீடத்தின் தலைவர். சிவஸ்ரீ ஜகதீஸ்வரக் குருக்கள், மயூராபதி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு உதயராகவக் குருக்கள் ஆகியோர் நடாத்தினர்.
நவராத்திரி விழா
இந்நிகழ்வில் பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 5 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri