ஈரானிய பயங்கரவாத ஆட்சியை முற்றிலுமாக அழிப்பதே நமது முதன்மை இலக்கு: நெதன்யாகு அறிவிப்பு
ஈரானிய பயங்கரவாத ஆட்சியை முற்றிலுமாக அழிப்பதே நமது முதன்மை இலக்காகும்" என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானின் அச்சுறுத்தலை முற்றிலுமாக அகற்றுவது மற்றும் அந்த ஆட்சியை ஒழிப்பது குறித்து தாம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பலமுறை பேசியுள்ளதாகவும், அண்மையில் தொலைபேசி வாயிலாகவும் விரிவாக விவாதித்ததாகவும் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
அக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலியத் தேர்தலில் நெதன்யாகு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என ட்ரம்ப் தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை
அதே சமயம், ஈரான் அணுஆயுதம் பெற மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளித்தால் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயார் என்றும் ட்ரம்ப் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சி வீழ்த்தப்பட்டால், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் தானாகவே வீழ்ச்சியடையும் என்றும், அதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதோடு லெபனானுடன் அமைதி ஒப்பந்தம் சாத்தியமாகும் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 4 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri