முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி உட்பட இருவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த தரப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(20.10.2026) உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது கணவருக்கு அத்தாட்சிப் பிணை வழங்க நீதிபதியைத் தூண்டும் வகையில், கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு லஞ்சம் வழங்க முயன்ற சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.
பிணை
இதேவேளை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகநபரான மீகமுவ/மினுவாங்கொட நீதிவான் நீதிமன்ற பதிவாளரை தலா 10 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு தனிப்பட்ட பிணைகளில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார்.
