ஞானசார தேரருக்காக நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட பூஜை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்காக நேற்றிரவு சாந்தி கர்மம் என்ற பாரம்பரிய சடங்கு ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக பௌத்த துறவி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள விகாரமகாதேவி பூங்காவில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசின் நடவடிக்கை
இந்நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த துறவி ஒருவர், நேற்று இரவு, ஞானசார தேரரின் விடுதலையை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக, 'சாந்தி கர்மம்' (நலன் மற்றும் பாதுகாப்பிற்கான பாரம்பரிய சடங்கு) ஒன்றை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த சாசனத்திற்கும் பிக்குகள் அணியும் காவி உடைக்கும் அவப்பெயரைத் தேடித்தரும் நபர்களுக்கு எதிராகவே அவர்கள் போராடுகின்றனர் என அந்த துறவி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "அரசாங்கத்திடம் நாங்கள் கூறுவது இதுதான்: இதை ஒரு கேலியாக நினைக்காதீர்கள். விகாரமகாதேவி பூங்காவில் கூடியிருக்கும் பிக்குகளின் எண்ணிக்கையைப் பாருங்கள், இந்தக் காவி உடைகளைப் பாருங்கள்.
இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை வெறும் மக்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் கணக்கிட முயல்கிறீர்கள் என்றால், நீங்கள் மிக மேலோட்டமாகவே இதைப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். அரசாங்கம் சிங்களவர்கள், பௌத்தர்கள் மற்றும் பௌத்த சாசனத்திற்கு எதிராக விரோதப் போக்குடன் செயல்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
ஜெயிலர் 2-வில் கேமியோ.. ஆனால், இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ.. வேற லெவல் கூட்டணி Cineulagam