சவுதி அரேபியா மீதான ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்! போர் விமானங்களை அனுப்பிய பிரித்தானியா
யேமனின் செயற்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தீவிரப்படுத்தி வரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை எதிர்கொள்ள உதவும் வகையில், பிரிட்டன் தனது ரோயல் ஏர் போர்ஸ் டைபூன் போர் விமானங்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
சவுதியின் நகரங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இவை தற்காப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடும் என்றும், ஹூதி கட்டுப்பாட்டுப் பகுதி மீது எந்தவிதமான தாக்குதல்களிலும் ஈடுபடாது என்றும் பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
வான்வழித் தாக்குதல்
சவுதி தலைநகர் ரியாத் விமான நிலையம் மற்றும் அந்த நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீதான ஹூதிகளின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை அடுத்தே,இந்த உடனடி பாதுகாப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போர் விமானங்களுடன் சேர்த்து, ஒரு ஏ-400எம் (A400M) போக்குவரத்து விமானம் மற்றும் கூடுதல் இராணுவ ஆலோசகர்களையும் பிரிட்டன் களமிறக்குகிறது.
அத்துடன், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வான்வழி எரிபொருள் நிரப்பும் உதவிகளும் மேலும் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.