ஞானசார தேரர் காவியுடையுடன் நீதிமன்றில் முன்னிலை! ஒக்டோபர் 23ஆம் திகதி முக்கிய முடிவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பொது பல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை காவியுடையுடன் அக்டோபர் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக பௌத்த விவகார திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் எந்த பௌத்த பிரிவை சேர்ந்தவரோ, அந்த பிரிவின் மகாநாயக்க தேரருக்கு பௌத்த விவகார திணைக்களத்தின் ஆணையாளர் இது குறித்து அறிவித்துள்ளதுடன், பிக்குவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது தொடர்பான முறையான வழிகாட்டல்களையும் ஒப்புதலையும் கோரியுள்ளார்.
துறவிக் கோலம்
இதற்க்கிடையில்,கோட்டே ஸ்ரீ கல்யாணி சமாகிரி தர்ம மகா சங்க சபையின் உபநாயக்க தேரரான கொட்டபிட்டியே ராகுல தேரர், ஞானசார தேரரின் பிக்குத் துறவிக் கோலத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கைகள் பௌத்த சாசனத்திற்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 3 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri