பிள்ளையானோடு கூட்டு சேர்ந்து தகுதியை இழந்த என்பிபி! பகிரங்கமாக கூறிய சாணக்கியன்
தேசிய மக்கள் சக்தியினர் சில சபைகளில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியினருடன் சேர்ந்து ஆட்சியமைக்க முன்வந்துள்ளார்கள் எனவே அவர்களுக்கு ஊழல் மோசடியை பற்றி பேச தகுதியில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர சபைக்கு தவிசாளர் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட அமர்வில் பார்வையாளராகக் கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
''தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமைக்கு ஏறாவூர் நகர சபையிலே நடந்த தெரிவு வரலாற்றிலே முக்கியமானதாக நான் பார்க்கின்றேன். இது தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இன நல்லிணக்தைப் பறைசாற்றுகின்றது.
இத்தகைய ஒரு நிலைமையை அடைந்து கொள்வதற்காக நாங்கள் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம்.
அதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை தமிழ் பேசும் மக்கள் ஆள வேண்டும் என நாங்கள் அவாவுறுகின்றோம்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஏறாவூர் நகர சபைக்கு ஒரு தமிழர் பிரதித் தவசாளராக தெரிவு செய்யப்படுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது முழுமையான ஆதரவை வழங்கி தமிழ் முஸ்லிம் சமூக ஐக்கியத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இதிலே முக்கியமான ஒரு விடயம் பிரதித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரல்ல அவர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்” என குறிப்பிட்டுள்ளார்.





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
