17 ஆண்டுகளின் பின்னர் தமிழ் அரசியல் கைதியொருவருக்கு பிணை - நிபந்தனைகளால் மீண்டும் சிறை
கடந்த 17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத்தகவல்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதம்
கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித இறுதித் தீர்ப்புமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த செல்லையா பியூபாகரன் என்பவருக்கே நேற்று இவ்வாறு பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும், நீதிமன்றம் விதித்த கடுமையான பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு போதிய பிணையாளர்களோ அல்லது வசதிகளோ இல்லாத காரணத்தால், பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை தாமதங்கள் குறித்து இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri