தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி20 மேற்கிந்திய தீவுகள் குழாமில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
மேற்கிந்திய தீவுகள் தென்னாப்பிரிக்காவுக்கு (South Africa) எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது்
குறித்த போட்டியானது ஓகஸ்ட் 24 டிரினிடாட்டில் (Trinidad) ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர்
முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் 2வது போட்டியில் தென்னாபிரிக்கா 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் நடைபெறவுள்ளது.
முதல் ஆட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இந்த ரி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஆந்த்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப் ஆகியோருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஹெட் மயர் அணிக்கு திரும்பியுள்ளார்.
20 ஓவர் கொண்ட தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் ரோவ்மன் பாவெல் (தலைவர்), ரோஸ்டன் சேஸ், அலிக் அதானஸ், பேபியன் ஆலன் நிக்கோலஸ் பூரன், சார்லஸ், மேத்யூ போர்டே, ஹெட்மயர், ஷாய் ஹோப், அகேல் ஹூசைன், ஷமர் ஜோசப், மெக்காய், குடாகேஷ், ரூதர்போர்டு, ஷெப்பர்டு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |