அநுரவின் உறுதிமொழி! சுரேஷ் சாலேயின் கைது விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் திட்டம்

2019 Sri Lanka Easter bombings Anura Kumara Dissanayaka Easter Attack Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By Rakesh Feb 28, 2026 11:47 AM GMT
Report

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கை, பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்று என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளம் மீது அதிரடி தாக்குதல்.. தீவிரமடையும் பதற்றநிலை!

அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளம் மீது அதிரடி தாக்குதல்.. தீவிரமடையும் பதற்றநிலை!

அநுரவின் உறுதிமொழி...

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு, 16 மாதங்கள் கடந்தும் அதனைச் செய்ய முடியாமல் போயுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதிமொழி அளித்திருந்தார். 

ஆனால், அதனைச் செய்யத் தவறியதால், தற்போது ஏப்ரல் மாதம் நெருங்கும் வேளையில் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சுரேஷ் சலேயைக் கைது செய்துள்ளனர்.

அநுரவின் உறுதிமொழி! சுரேஷ் சாலேயின் கைது விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் திட்டம் | Suresh Sallay Arrested

இந்தக் கைதின் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும், கத்தோலிக்க மக்களையும் திருப்திப்படுத்த முயல்கின்றார். குறிப்பாக, யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோதும் பிரிவினைவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே அவர் செயற்பட்டிருந்தார். 

அதேபோன்று, தற்போது நிலக்கரி மோசடி தொடர்பாக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கும், ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவாக மக்கள் மீண்டும் அணிதிரள்வதைத் தடுப்பதற்குமே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழக்குப் பதிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்ட ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரைப் பயன்படுத்தியே இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அநுரவின் உறுதிமொழி! சுரேஷ் சாலேயின் கைது விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் திட்டம் | Suresh Sallay Arrested

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜஸ்மின் தப்பிச் சென்றபோது, கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாக இருந்தவர் தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ஆவார். இவர்களையும், தேசியப் பட்டியல் உறுப்பினர் இப்ராஹிமின் மகன்களையும் வைத்துக்கொண்டே இந்த நாடகத்தை அநுர அரச தரப்பினர் அரங்கேற்றுகின்றனர்.

எந்தவொரு நாட்டுத் தலைவரும் தனது நாட்டின் புலனாய்வுத் துறையைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதில்லை. ஆனால், இந்த அரசு பிரிவினைவாதிகளைத் திருப்திப்படுத்தத் தனது நாட்டின் புலனாய்வுத் துறையையே காட்டிக்கொடுத்துள்ளது. இது யுத்தத்தை வெற்றிகொள்ள உயிர்த்தியாகம் செய்தவர்களின் உறவினர்களைப் புண்படுத்தும் செயலாகும்  என குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்

மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US